நிற்காமல் செல்ல முயன்ற காரின் பானட்டில் ஏறி அமர்ந்த காவலர்... தள்ளி விட்டு சீறிப் பாய்ந்து சென்ற கார்

0 2056

மும்பையில் சாலைப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் நிற்காமல் செல்ல முயன்ற காரின் பானட் மீது ஏறி காரை நிறுத்த முயற்சித்தார்.

ஆயினும் அந்தக் கார் நிற்காமல் சிறிது தூரம் பானட்டில் அவரை சுமந்தபடி சென்றது. கார் வேகம் எடுத்ததையடுத்து காவலர் காரில் இருந்து கீழே விழுந்தார்.

இதையடுத்து கார் வேகமாக பறந்து சென்றுவிட்டது. இந்தக் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி வீடியோ வைரலாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments