ஐ.பி.எல்: பிளே ஆப் சுற்றை உறுதி செய்த சென்னை அணி...ஐதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்.!

0 3074

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத்க்கு எதிரான லீக் ஆட்டத்தில் கேப்டன் டோனியின் இமாலய சிக்சர் மூலம் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் விருத்திமான் சஹா 44 ரன்கள் சேர்த்தார்.

தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியில், ருதுராஜ் கைக்வாட் 45 ரன்னும், பாப் டு பிளிஸ்சிஸ் 41 ரன்களும் சேர்த்து இலக்கை எட்ட உதவினர். கடைசி 3 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மைதானத்திற்கு வெளியே சிக்சராக பறக்க விட்டு அணிக்கு வெற்றியை தேடித் தந்தார் கேப்டன் டோனி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments