ஈக்குவேடார் சிறைச்சாலை கலவரத்தில் 116 பேர் படுகொலை

0 1662

ஈக்குவேடார் நாட்டின் வரலாற்றிலேயே முதல் முறையாக சிறைச்சாலை கலவரத்தில் 116 பேர் கொல்லப்பட்டனர்.

செவ்வாய் இரவு குவாயாக்கில் (GUAYAQUIL) நகர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள 2 கும்பல்களுக்கு இடையே மோதல் வெடித்தது. அவர்கள் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்கி கொண்டதில் 116 பேர் உயிரிழந்தனர். ஏராளமான கைதிகள் தலை துண்டிக்கப்பட்டு கொடுரமாகக் கொல்லப்பட்டனர். ராணுவத்தின் உதவியுடன் போலீசார் நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள உறவினர்களின் நிலையை தெரிந்து கொள்ள ஏராளமான மக்கள் அங்கு குவிந்தனர்.

39,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ள இந்தச் சிறைச்சாலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 79 கைதிகளும், ஜூலை மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 22 கைதிகளும் கொல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments