நான் கால்பந்தாட்ட வீரர், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் இல்லை - கால்பந்தாட்ட வீரர் அம்ரிந்தர் சிங் விளக்கம்

0 3884
நான் கால்பந்தாட்ட வீரர், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் இல்லை

பஞ்சாப் அரசியல் குறித்து டுவிட்டரில் பதிவிடுவோர் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் என நினைத்துத் தவறுதலாகக் கால்பந்தாட்ட வீரர் அம்ரிந்தர் சிங்குக்குப் பதிவுகளை டேக் செய்த நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஊடக நண்பர்களே என விளித்துத் தன் பெயர் அம்ரிந்தர் சிங் என்றும், இந்தியக் கால்பந்து அணியின் கோல்கீப்பர் என்றும், முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமரீந்தர் சிங்குக்கான செய்திகளைத் தனக்கு டேக் செய்வதை நிறுத்தும்படியும் கால்பந்தாட்ட வீரர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங், இளம் நண்பரின் நிலை குறித்துப் பரிதாபப்படுவதாகவும், விளையாட்டில் தொடர்ந்து முன்னேற வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments