உணவுகள் பாதுகாப்பாக வழங்கப்படுகிறதா? மாணவர்களிடம் நேரடியாக கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2301
உணவுகள் பாதுகாப்பாக வழங்கப்படுகிறதா? மாணவர்களிடம் நேரடியாக கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்திலுள்ள ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்துவிட்டு, வரும் வழியில் பென்னாகரத்திலுள்ள ஆதி திராவிடர் மாணவர் நல விடுதிக்கு சென்று முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

விடுதியிலுள்ள மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், அங்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்து, விஜய் என்ற மாணவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறினார். பின்னர், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் பாதுகாப்பாக வழங்கப்படுகிறதா? என சமயலறைக்கு சென்று முதலமைச்சர் பார்வையிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments