தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தல்

0 3631
தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தல்

நாட்டில் பண்டிகை காலம் வர உள்ள நிலையில், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, பண்டிகைகளை கொண்டாட வலியுறுத்தினார்.

மேலும் இந்த ஆண்டு மட்டுமாவது பண்டிகைகளை ஆடம்பரமின்றி கொண்டாடுமாறு ஐசிஎம்ஆர் இயக்குனர் பல்ராம் பார்கவா வலியுறுத்தினார். சுற்றுலா தலங்களில் அதிகளவில் கூடுவது, சுற்றுலா சென்றவர்களுக்கு மட்டுமின்றி, உள்ளூர் மக்களுக்கும் தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், 12 வயதிற்கு மேற்பட்டோருக்கான சைடஸ் கேடிலா நிறுவனத்தின் சைகோவ்-டி தடுப்பூசி, விரைவில் தேசிய தடுப்பூசி இயக்கத்தில் இணைய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments