விழுப்புரம் டாஸ்மாக் குடோனில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை ; கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் பறிமுதல்

0 2602
விழுப்புரம் டாஸ்மாக் குடோனில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை

விழுப்புரம் மாவட்டம் காட்பாடி ரயில்வே மேம்பாலம் அருகேயுள்ள டாஸ்மாக் குடோனில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் குடோனில் கள்ளத்தனமாக, மதுபாட்டில்கள் மொத்த விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அங்கு 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

அதில், ரொக்கம் மற்றும் சில ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, டாஸ்மாக் குடோன் மேலாளர் முருகன் மீது வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments