தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் ; சென்னை வானிலை ஆய்வு மையம்

0 3291
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் வட மாவட்டங்கள் உட்பட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை முதல் 4 நாட்களுக்கு தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழையும், எஞ்சிய பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு இலங்கை கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், அதனால் மீனவர்கள் 24 மணி நேரத்திற்கு அங்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments