ப்ளான் போட்டு திருட்டு.. பெண்ணிடம் இருந்து செயினை பறித்து ஆட்டோ ஓட்டுநரிடம் கைமாற்றிய மர்ம நபர்..!

0 3548

மதுரையில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்திலிருந்து செயினை பறித்துச் செல்லும் மர்ம நபர், அந்த செயினை சாலையில் சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநரிடம் கைமாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அழகர்கோவில் சாலையில் நடந்த கொள்ளைச் சம்பவத்தின் சிசிடிவி புதன்கிழமை வெளியானது. கொள்ளையன் செயின் பறிக்க வந்ததை எதிர்பார்க்காத பெண்கள், நிலை தடுமாறி சாலையோரத் தடுப்பில் மோதி கீழே விழுவதும் அதில் பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், பெண்ணிடம் இருந்து பறித்துச் சென்ற செயினை முன்னே சென்ற ஷேர் ஆட்டோ ஓட்டுநரிடம் மர்ம நபர் கைமாற்றும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி போலீசாரின் கையில் சிக்கியுள்ளது.

இந்த செயினை பறித்த 15 நிமிடத்தில் தல்லாகுளம் காவல் நிலையம் அருகே பைக்கில் குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 15 சவரன் தாலிச் செயினையும் மர்ம நபர் பறித்துச் சென்றிருப்பதாகவும், இரு கொள்ளையும் ஒரே கும்பலால் அரங்கேற்றியிருக்கக் கூடும் என்ற கோணத்தில், பைக் மற்றும் ஆட்டோவின் பதிவெண்களை கொண்டு மர்ம நபர்களை தேடி வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments