விழுங்கிய காட்டு பூனையை மலைப்பாம்பு கக்கிய வீடியோ வைரல்

0 4245
காட்டு பூனையை விழுங்கிய மலைப்பாம்பு ; விழுங்கிய காட்டு பூனையை மலைப்பாம்பு கக்கிய வீடியோ வைரல்

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் காட்டு பூனையை விழுங்கிய மலைப்பாம்பு, அதனை கக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

எழந்தூர் தாலுக்கா முரிட்டிபால்யா கிராமத்தை சேர்ந்த விவசாயி ஸ்ரீனிவாஸ் என்பவரது கரும்பு தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று நகரமுடியாமல் இருந்துள்ளது. இதுகுறித்து ஸ்ரீனிவாஸ் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இந்நிலையில், அந்த மலைப்பாம்பு தனது வயிற்றில் இருந்த காட்டுப் பூனையை வெளியே கக்கியது. பெரிய அளவிலான இரையை விழுங்கியதால் நகர முடியாமல் தவித்த மலைப்பாம்பு காட்டுப் பூனையை கக்கியதும் அங்கிருந்து நகர்ந்தது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments