உத்தரப்பிரதேசத்தில் கொடுங்குற்றங்களில் தொடர்புள்ள காவல் அதிகாரிகளை அடையாளம் காண முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தல்

0 1716
உத்தரப்பிரதேசத்தில் கொடுங்குற்றங்களில் தொடர்புள்ள காவல் அதிகாரிகளை அடையாளம் காண முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தல்

உத்தரப்பிரதேசத்தில் கொடிய குற்றங்களில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளை அடையாளம் காணவும், அவர்களுக்கு எதிரான சான்றுகளைத் திரட்டவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.

கோரக்பூரில் விடுதியில் சோதனையிட்ட காவல்துறையினர் தாக்கியதில் நில வணிகர் ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாகக் காவலர்கள் 6 பேர் மீது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இதையடுத்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறையினரும், காவல் அதிகாரிகளும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதாகப் புகார்கள் வந்துள்ளதாகவும், இது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தகையோருக்குக் காவல்துறையில் இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார். குற்றச்செயல்களில் தொடர்புடைய காவல்துறையினரைப் பணிநீக்கம் செய்வதற்காக அவர்களுக்கெதிரான சான்றுகளைத் திரட்டும்படி அறிவுறுத்தியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments