இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார் விவேக் ராம் சவுத்ரி

0 1858

இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுத்ரி பொறுப்பேற்றுக்கொண்டார்.

விமானப்படைத் தளபதியாக இருந்த ராகேஷ் குமார் சிங்கின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து டெல்லியில் இன்று புதிய தளபதியாக விவேக் ராம் சவுத்ரி பொறுப்பேற்றுக் கொண்டார்.

வடக்கு எல்லையில் சீனாவுடன் மோதல் முற்றிய காலக்கட்டத்தில் அவர் லடாக் பிரிவுக்குப் பொறுப்பானவராக இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

வான் பாதுகாப்புக்கான எஸ் 400 ஏவுகணை செலுத்தும் அமைப்பை ரஷ்யாவிடமிருந்து பெற்றுச் செயல்படுத்துவது, விமானப்படைப் பிரிவை நவீனப்படுத்துவது உள்ளிட்ட பொறுப்புகள் அவருக்கு உள்ளன. இவர் நீலகிரி வெலிங்டனில் உள்ள பாதுகாப்புத் துறை அலுவலர் பயிற்சிக் கல்லூரியில் படித்தவர் ஆவார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments