கூலிப்படைக்கு அரிவாள், கத்தி சப்ளை செய்த பட்டறை உரிமையாளர் கைது

0 1856
கூலிப்படைக்கு அரிவாள், கத்தி சப்ளை செய்த பட்டறை உரிமையாளர் கைது

நெல்லையில் கூலிப்படையினருக்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பொருட்களை தயார் செய்து விற்பனை செய்த, பட்டறை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பத்தமடை பகுதியில் பட்டறை உரிமையாளர் சுடலை என்பவர், கூலிப்படைக்கு ஆயுதங்களை தயார் செய்து, சப்ளை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து தனிப்படை போலீசார் அவரது பட்டறையில் அதிரடி சோதனை நடத்தினர்.

அவரிடமிருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஐந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments