உள்ளாட்சித் தேர்தலில் எந்தப் புகாரும் எழக்கூடாது… உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

0 1771
உள்ளாட்சித் தேர்தலில் எந்தப் புகாரும் எழக்கூடாது… உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

எந்தப் புகாரும் எழாதவாறு உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்துக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

மத்திய அரசுப் பணியாளர்களைத் தேர்தல் பார்வையாளர்களாக நியமித்தல், தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு மத்திய ரிசர்வ் காவல் படையை அமர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளைப் பரிசீலிக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 2019ஆம் ஆண்டுத் தேர்தலில் பின்பற்றிய நடைமுறைகளை இந்தத் தேர்தலிலும் பின்பற்ற வேண்டும் என அதிமுக வழக்கறிஞர் வலியுறுத்தினார்.

வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்வது பற்றித் தேர்தல் ஆணையம் எதுவும் குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்தார். தொழில் நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் தேர்தலில் எந்தப் புகாரும் வராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும், வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கருத்துத் தெரிவித்தார்.

வாக்குப் பெட்டிகள் வைக்கும் அறையில் கடுமையான பாதுகாப்பும், சிசிடிவி கண்காணிப்பும் இருக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு  உத்தரவிட்டார். என்ன நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி நாளை பதிலளிக்கத் தமிழக அரசு தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments