கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்த 593 பேர் டிஸ்மிஸ்... அமெரிக்க விமான நிறுவனம் அதிரடி நடவடிக்கை

0 2203

கொரோனா தடுப்பூசி போட மாட்டோம் என முடிவு செய்த சுமார் 600 பணியாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என அமெரிக்க யுனைட்டட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் பணியாற்றும் தங்களது பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கடந்த ஆகஸ்ட் மாதம் யுனைட்டட் நிறுவனம் உத்தரவிட்டது. அதற்கான சான்றிதழை தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் கடந்த திங்கள்கிழமையுடன் முடிவடைந்தது.

அதன் பின்னர் அமெரிக்காவில் பணியாற்றும் மொத்த பணியாளர்களில் 593 பேர் தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்காத காரணத்தால் அவர்களை பணிநீக்கம் செய்யும் வேலை துவங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அமெரிக்காவில் யுனைட்டட் ஏர்லைன்சுக்கு உள்ள 67 ஆயிரம் பணியாளர்களில் 3 சதவிகிதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments