உள்ளாட்சித் தேர்தலையொட்டி மது விற்பனைக்குத் தடை

0 2646

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும், தற்செயல் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும் குறிப்பிட்ட நாட்களில் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் அக்டோபர் 4 முதல் 6 வரையும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மற்றும் தற்செயல் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அக்டோபர் 7 முதல் 9 வரையும் மதுவகைகள் விற்கத் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இதேபோல் அக்டோபர் 12ஆம் நாளில் வாக்கு எண்ணுமிடங்களில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் மது விற்கவும், மதுக்கூடம், மதுக்கடை திறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments