ஐ.பி.எல்: சென்னை-ஐதராபாத் இன்று மோதல்... சென்னை அணியின் ஆதிக்கம் தொடருமா? தோல்விக்கு பதிலடி கொடுக்குமா ஐதராபாத் ?

0 2682

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில், இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி 8 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திலும், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி 2 வெற்றி, 8 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலும் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற சென்னை அணி முனைப்பு காட்டி வரும் நிலையில், நடப்பு சீசனில் முந்தைய போட்டியில் சென்னை அணியுடன் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க ஐதராபாத் அணியும் தீவிரம் காட்டி வருகிறது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி சார்ஜா மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments