தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

0 2647

சென்னையில் காலை நேரத்தில் கருமேகங்கள் சூழ, மிதமான மழை பெய்தது.

அண்ணா சாலை, வடபழனி, தியாகராய நகர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. இதனிடையே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழையும், வருகிற 2-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இந்திய கடற் பகுதிகளை விட்டு பாகிஸ்தான் கடற்பகுதிகளுக்கு செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments