சிறுத்தையை கைத்தடியால் விரட்டிய வீரப்பெண்... நேருக்கு நேர் எதிர்கொண்ட தீரம்..!

0 49518
சிறுத்தையை கைத்தடியால் விரட்டிய வீரப்பெண்... நேருக்கு நேர் எதிர்கொண்ட தீரம்..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 55 வயது பெண்மணி ஒருவர் தன்னை தாக்கிய சிறுத்தையை கைத்தடியால் தீரத்துடன் எதிர்கொண்டு அடித்து விரட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

மும்பையின் ஆரேவில் குடியிருப்புப் பகுதியை சேர்ந்தவர் 55 வயதான நிர்மலா தேவி சிங். இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் தினந்தோறும் சென்று அமர்ந்து ஓய்வெடுப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு, சிறுத்தை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி நிர்மலா தேவி சிங்கின் வீட்டு தோட்டத்திற்குள் வந்து அமர்ந்திருந்தது.

இதனை அறியாத நிர்மலா, வழக்கம் போல் தனது கைத்தடி உதவியுடன் தோட்டத்திற்குள் வந்துள்ளார். நிர்மலா வருவதை பார்த்த சிறுத்தை பதுங்கிக் கொண்டது. சற்று நேரத்தில் நிர்மலா அங்கு சென்று அமர்ந்ததும் வேகமாக பாய்ந்து வந்த சிறுத்தை அவரை தாக்கியது. இதனை அடுத்து பதற்றம் அடைந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் தனது கைத்தடி உதவியுடன் சிறுத்தையை தீரத்துடன் தாக்கத் தொடங்கினார் நிர்மலா.

நிர்மலா கைத்தடியால் தாக்கியதால் ஒரு கட்டததில் சிறுத்தை நிலை குலைந்தது. இந்த நிலையில் சத்தம் கேட்டு நிர்மலா தேவியின் உறவினர்கள் ஓடி வந்ததால் சிறுத்தை தப்பிச்சென்றது. இந்நிலையில் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அப்பெண் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். வனப்பகுதிக்கு அருகாமையில் உள்ள மும்பை ஆரேயில், 2 நாட்களுக்கு முன் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவனையும் சிறுத்தை ஒன்று தாக்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments