அரசு ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை, 83 சவரன் தங்கம், பத்திர ஆவணங்கள் பறிமுதல்

0 5011

புதுக்கோட்டையில் அரசு ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 83 சவரன் தங்கம், மூன்றரை கிலோ வெள்ளி, பல லட்சம் மதிப்பிலான பத்திர ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பணியாற்றிய முருகானந்தம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் தொடர்புடைய 6 இடங்களில் சோதனையிட்டனர்.

புதுக்கோட்டை சார்லஸ் நகரில் 3 இடங்களில் சோதனையிட்ட போலீசார் 83 சவரன் தங்க நகை, 3 புள்ளி 7 கிலோ வெள்ளி, பல லட்ச ரூபாய் மதிப்பிலான பத்திர ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments