குழந்தைகளுக்கான ஃபைஸர் நிறுவன தடுப்பூசிகள் நவம்பர் வரை கிடைக்காது எனத் தகவல்

0 2124

5 முதல் 11 வயதுடைய குழந்தைகளுக்கான ஃபைஸர் நிறுவனத்தின் தடுப்பூசி நவம்பர் மாதம் வரை கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகளுக்கான தடுப்பூசியின் செயல்திறன் குறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் ஆராய்ச்சியை சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், தடுப்பூசி பற்றிய சமீபத்திய ஆய்வின் தரவை சுகாதார கட்டுப்பாட்டாளர்களுக்கு வழங்கியதாக கூறும் ஃபைஸர் நிறுவனம், இதனை, அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் சான்றுகளை மறுபரிசீலனை செய்வார்கள் அதனால் காலதாமதம் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments