கஞ்சா கடத்த முயன்றதாக எழுந்த புகார் ; யூ-டியூப் பிரபலம் "நாகை மீனவன்" வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை

0 2766
யூ-டியூப் பிரபலம் "நாகை மீனவன்" வீட்டில் ரெய்டு

படகு மூலம் இலங்கைக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை கடத்த முயன்றதாக எழுந்த புகாரின் பேரில் “நாகை மீனவன்” யூடியூப் சேனல் நிர்வாகி மற்றும் அவரது சகாக்கள் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை அதிகாலை கீச்சாங்குப்பம் பகுதியில் படகு ஒன்றில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 280 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவோடு படகை விட்டுவிட்டு தப்பியோடியவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்டப் படகு, "நாகை மீனவன்" என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்த குணசீலன் என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. அதன் பேரில் குணசீலன் மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளில் 50க்கும் மேற்பட்ட சுங்கத்துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments