சாலையை கடக்க முயன்ற பைக் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து ; பைக்கில் பின்னால் அமர்ந்திருந்தவர் சாமர்த்தியமாக கீழே குதித்து உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

0 3084
சாலையை கடக்க முயன்ற பைக் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலையை கடக்க முயன்ற பைக் மீது சரக்கு வாகனம் மோதிய நிலையில், பைக்கில் பின்னால் அமர்ந்திருந்தவர் சாமர்த்தியமாக கீழே குதித்து உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் காக்காத்தோப்பு பிரிவில் சக்திவேல் என்பவரும், மாரி என்பவரும் பைக்கில் சாலையைக் கடக்க முயன்றனர். எதிரே வாகனம் வந்து கொண்டிருந்த போதே அவசரக் கதியில் சாலையைக் கடக்க முயன்ற நிலையில், கரூரில் இருந்து உசிலம்பட்டி நோக்கி வந்த சரக்கு வாகனம் பைக் மீது பயரங்கரமாக மோதியது.

பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த மாரி சரக்கு வாகனம் மோத வருவதை அறிந்து சுதாரித்துக் கொண்டு கீழே குதித்து உயிர் தப்பினார். கீழே விழுந்த வேகத்தில் எழுந்து ஓட நினைத்த மாரியை கண்டு அந்த வழியாக வந்த கார் ஓட்டுநரும் வேகத்தை குறைத்தார்.

பைக்கை ஓட்டி வந்த சக்திவேல் சரக்கு வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி சிறிது நேரம் இழுத்துச் செல்லப்பட்டு படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் இருந்த நூலிழையில் தப்பித்த அதிர்ச்சியில் உடன் வந்தவரைக் கூட கவனிக்காமல் செய்வதறியாது தனியாக நின்றிருந்த மாரி, சிறிது நேரம் கழித்து ஆம்புலன்ஸுக்கும், உறவினருக்கும் தகவல் அளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments