அன்றே கணித்தார்.. சினிமா சிங்கம் சூர்யா.. வில்லன் நடிகர் கைது.. அதே போதை பொருள் கடத்தல் வழக்கு..

0 14220
அன்றே கணித்தார்.. சினிமா சிங்கம் சூர்யா.. வில்லன் நடிகர் கைது.. அதே போதை பொருள் கடத்தல் வழக்கு..

சிங்கம் டூ படத்தில் போதை பொருள் கடத்தும் வில்லனாக நடித்திருந்த நைஜீரிய இளைஞர், தற்போது நிஜத்தில் போதை பொருள் கடத்திய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திரையில் நடிகர் சூர்யா நடித்த சினிமா காட்சிகள் தரையில் நிஜமாகும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு... 

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான படங்களில் இடம் பெற்ற பல காட்சிகள் அவ்வப்போது நிகழ்கால நிஜ சம்பவங்களை அப்படியே பிரதிபலிக்கும், அதனை அன்றே கணித்தார் சூர்யா..! என்று டைட்டில் வைத்து டிரெண்டிங் ஆக்குவது குறும்புகார நெட்டிசன்கள் வழக்கம்..!

2011 ஆம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தில் இடம்பெற்ற சீனாவின் கொள்ளை நோய்...! கொரோனாவாகவும், காப்பான் படத்தில் இடம் பெற்றது போல வெட்டுக்கிளிகள் பெருங்கூட்டமாக விவசாய நிலத்துக்குள் புகுந்த தாக்குதல் சம்பவம் நிஜத்திலும் அரங்கேறியது.

இப்படியே சூர்யாவின் படத்திலும் நிஜத்திலும் ஒரே மாதிரி நடந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி, "அன்றே கணித்தார் சூர்யா" என்று ரசிகர்கள் மீம்ஸ் மூலம் சம்பவம் செய்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அவரது படக்காட்சி ஒன்று நிஜமாகி உள்ளது.

அந்த வகையில் சிங்கம் 2 படத்தில் போதைப்பொருள் கடத்தல்காரனாக நடிந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த நடிகர், நிஜத்திலும் போதை பொருள் கடத்தலில் கைதாகி இருப்பது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. நைஜீரிய நாட்டை சேர்ந்த காக்விம் மால்வின் என்ற அந்த நடிகர் சிங்கம் படத்தில் போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஆக நடித்த மெயின் வில்லன் டேனியின் வலதுகையாக நடித்துள்ளார்.

சிங்கம் படம் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 20 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் பெரும்பாலும் போதைப்பொருள் கடத்தல்காரனாகவே நடித்துள்ளார். சில ஆண்டுகள் நடிப்பின் மீது கொண்ட மோகம் காரணமாக மும்பையில் நியூயார்க் பிலிம் அகாடமியில் சினிமா குறித்து படித்து விட்டு பெங்களூருவில் தங்கியிருந்து தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வந்தார்.

நடிப்பு தொழில் மூலமாக போதிய வருமானம் கிடைக்காத நிலையில் உண்மையாகவே போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்துவந்துள்ளார் காக்விம். கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த காக்விம் வீட்டில் சோதனை செய்த போலீசார் அவரிடம் இருந்து எம்.டி.எம்.ஏ போதைப் பொருட்களையும் 8 லட்சம் மதிப்புள்ள ஹாசிஸ் என்ற கஞ்சா எண்ணெயும் ,5,000 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் அவரது செல்போன் உள்ளைட்டவற்றையும் காவல்துறையினர் அவரிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர்.

சினிமாவில் கடத்தல்காரனாக நடிந்த நபர் , நிஜத்திலும் போதைப்பொருள் கடத்தல்காரன் ஆக உருமாறி காவல்துறையிடம் சிக்கிக் கொண்ட சம்பவத்தில் , சினிமா பிரபலங்களும் தொடர்பில் இருந்து போதை பொருள் வாங்கி வந்தார்களா ? என்பது குறித்து செல்போன் தொடர்புகளை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

சுருங்க சொன்னால் கண்டம் விட்டு கண்டம்... நாடு விட்டு நாடு போனாலும் போதை பொருள் கடத்தினால் போலீஸ் பிடிக்கும் என்பதையும் அன்றே கணித்தவர் சினிமா சிங்கம் சூர்யா..! என்பதும் இதில் நிஜமாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments