ஒருதலை காதல் பிரச்சனையில் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு ; சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 2 இளைஞர்கள் கைது

0 1829
ஒருதலை காதல் பிரச்சனையில் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு

சென்னையில் ஒருதலை காதல் பிரச்சனையில் 4 இருசக்கர வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். டி.பி சத்திரத்தில் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட 4 இருசக்கர வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதாக மார்ட்டின் என்பவர் போலீசில் புகாரளித்திருந்தார்.

சிசிடிவி காட்சிப் பதிவுகளைக் கொண்டு மணிகண்டன், சஞ்சய் என்ற 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். மார்ட்டினின் மகன் அரவிந்தன் காதலிக்கும் பெண்ணையே மணிகண்டன் ஒருதலையாகக் காதலிப்பதும், அது தொடர்பான தகராறில் அரவிந்தனின் பைக்குக்கு மணிகண்டன் தீ வைத்ததும் விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. அரவிந்தனின் பைக்குக்கு வைக்கப்பட்ட தீ, அருகிலிருந்த மேலும் 3 இருசக்கர வாகனங்களுக்கு பரவியதும் தெரியவந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments