ஆஸ்திரேலியாவில் உள்ள 18 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த மழைக்காடுகள், அங்கு வசிக்கும் பழங்குடியினரிடம் ஒப்படைப்பு

0 1929

ஸ்திரேலியாவில் உள்ள உலகின் பழமையான மழைக்காடுகளைச் சொந்தம் கொண்டாடும் உரிமை அங்கு வசிக்கும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

குவின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள Daintree மழைக்காடுகள் 18 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த மழைக்காடுகளில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டதால், வெப்பநிலை அதிகரித்து பருவநிலை மாற்றத்துக்கு அது வழி வகுத்தது.

மழைக்காடுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் களமிறங்கிய குவின்ஸ்லாந்து அரசு, அந்தக் காடுகளையும், அங்குள்ள வனவிலங்கு சரணாலயத்தையும், அங்கு நெடுங்காலமாக வசிக்கும் பழங்குடியினரிடம் ஒப்படைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments