தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தரமற்ற அரிசி, பருப்பு ; அதிகாரிகள் நேரில் ஆய்வு

0 1603
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தரமற்ற அரிசி, பருப்பு

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புழுத்துப்போன அரிசியும் பூச்சி அரித்த பருப்பும் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஊரடங்கு காலம் தொடங்கி, ஏழை மாணவர்கள் பயனடையும் வகையில், மாதந்தோறும் அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்டவை சத்துணவு அமைப்பாளர்கள் மூலம் பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி பொசுக்குடிபட்டி தொடக்கப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விநியோகிக்கப்பட்ட அரிசியும் பருப்பும் புழுத்துப்போய், வண்டுகளுடன் காணப்பட்டதாக பெற்றோர் சார்பில் புகாரளிக்கப்பட்டது.

இதனையடுத்து மாவட்ட அதிகாரிகள், நேரில் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறிச் சென்றுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments