மதுரையில் பட்டப்பகலில் தோழியுடன் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

0 23434
மதுரையில் பட்டப்பகலில் தோழியுடன் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

மதுரையில் பட்டப்பகலில், பரபரப்பான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்திலிருந்து மர்ம நபர் செயின் பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அழகர்கோவில் சாலையில் நேற்று இரண்டு பெண்கள் ஸ்கூட்டரில் செல்வதும் அவர்களை நெருக்கியபடி மற்றொரு இருசக்கர வாகனத்தில் வரும் ஹெல்மெட் அணிந்த மர்ம நபர், ஸ்கூட்டியை ஓட்டிச் செல்லும் பெண்ணின் கழுத்திலிருந்து சங்கிலியை அறுத்துக் கொண்டு வேகமாகத் தப்பிச் செல்வதும் சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது. இதனை எதிர்பார்க்காத பெண்கள், நிலை தடுமாறி சாலையோரத் தடுப்பில் மோதி கீழே விழுவதும் அதில் பதிவாகியுள்ளது.

கீழே விழுந்த பெண்கள் படுகாயமடைந்த நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதியில்தான் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் எஸ்பி அலுவலகம் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments