உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் எலான் மஸ்க்

0 6378

லக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ள டெஸ்லா சிஇஒ எலான் மஸ்க், இரண்டாவது இடத்தில் இருக்கும் அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ்க்கு நம்பர் 2 என்ற சிலையை அனுப்ப இருப்பதாக கிண்டலடித்துள்ளார்.

இது தொடர்பாக எலான் மஸ்க், அனுப்பியதாக கூறப்படும் மின்னஞ்சலில், வெள்ளிப் பதக்கத்துடன், 2வது நம்பரை குறிப்பிடும் வடிவத்தில் மிகப்பெரிய சிலையை ஜெப் பெஸோஸ்க்கு அனுப்ப இருப்பதாக கேலி செய்துள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

எலான் மஸ்க் - ஜெப் பெஸோஸ் இடையே விண்வெளி திட்டங்கள், தானியங்கி கார் உற்பத்தி போன்ற துறைகளில் கடும் போட்டி இருந்து வருகிறது.

உலக பணக்காரர்கள் வரிசையில் ஜெப் பெஸோஸ் முதலிடத்தில் இருந்து வந்த நிலையில், டெஸ்லா பங்குகளின் விலை உயர்வால் எலான் மஸ்க் 20 ஆயிரம் கோடி டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஜெப் பெஸோஸ் 19 ஆயிரத்து 200 கோடி டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments