வாக்காளர் பட்டியல் தவறுக்காக தேர்தலை தள்ளிவைக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

0 1902
வாக்காளர் பட்டியல் தவறுக்காக தேர்தலை தள்ளிவைக்க முடியாது

வாக்காளர் பட்டியலில் தவறு நடந்துள்ளது என்பதற்காக, உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தவறுகளை திருத்தி புது வாக்காளர் பட்டியல் வெளியிடும் வரை தேர்தல் நடத்தக் கூடாது எனக் கூறி வழக்கு தொடரப்பட்டது.

இன்று நடைபெற்ற விசாரணையின்போது, தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாகவும், பெயர்கள் தவறாக சேர்க்கப்பட்டதற்காக தேர்தலை தள்ளிவைக்க முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தவறுகளை திருத்த நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments