மீண்டும் விமானத்தை இயக்க இந்தியாவிற்கு தாலிபான்கள் கடிதம்

0 2283
மீண்டும் விமானத்தை இயக்க இந்தியாவிற்கு தாலிபான்கள் கடிதம்

ஆப்கானிஸ்தான் உடனான விமான போக்குவரத்தை உடனடியாக துவங்க வேண்டும் என இந்தியாவுக்கு தாலிபான்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு அவர்கள் எழுதிய கடிதத்தில், அமெரிக்கப் படையினரால் சேதப்படுப்பட்ட காபூல் விமான நிலையம், கத்தார் உதவியுடன் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்தியா - ஆப்கான் இடையே சுமூக பயணிகள் போக்குவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் கடிதம் எழுதப்பட்டதாக தாலிபான் அரசின் விமானப் போக்குவரத்து அமைச்சர் அகுன்சாடா தெரிவித்துள்ளார்.

ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், இந்தியா ஆகஸ்ட் 21ந் தேதியுடன் விமானப்போக்குவரத்தை நிறுத்தியது. இந்நிலையில் தாலிபான்கள் அனுப்பிய கடிதம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments