இரு சக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து... பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் நூலிழையில் உயிர்தப்பிய பரபரப்பு சிசிடிவி காட்சி

0 2704

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

இருசக்கர வாகனத்தில் வந்த வடமதுரையைச் சேர்ந்த இருவர் காக்காத்தோப்பு தேசிய நெடுஞ்சாலைப் பிரிவில் சாலையைக் கடக்க முயன்றனர். அப்போது வேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்று மோதியதில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மாரி என்பவர் உயிர்தப்பினார்.

வாகனத்தை ஓட்டிச் சென்ற சக்திவேல் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதே பகுதியில் இதுவரை 30க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments