கொரோனா தடுப்பூசி போட வந்தவருக்கு வெறிநாய்க் கடி தடுப்பூசி...மருத்துவர், செவிலியர் என இருவர் பணியிடை நீக்கம்

0 2467

மகாராஷ்டிரத்தின் தானேயில் கொரோனா தடுப்பூசி போட வந்தவருக்கு வெறிநாய்க் கடிக்கான தடுப்பூசியைப் போட்ட மருத்துவ அலுவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தானே கல்வா நகர்ப்புற நலவாழ்வு நிலையத்துக்குச் சென்ற ராஜ்குமார் யாதவ் என்பவர் கொரோனா தடுப்பூசி முகாம் என நினைத்து வெறிநாய்க்கடி தடுப்பூசி போடுமிடத்தில் வந்து வரிசையில் அமர்ந்துள்ளார். அப்போது அவர் எதற்காக வந்துள்ளார் எனக் கேட்காமலேயே இரண்டு கைகளிலும் தடுப்பூசி போட்டுள்ளனர். இரு கைகளிலும் போட்டது எதற்காக என அவர் கேட்டதையடுத்தே வெறிநாய்க் கடி தடுப்பூசி போட்டுள்ளதாகச் செவிலியர் தெரிவித்துள்ளார்.

இதனால் அச்சமடைந்த அவர் மேலதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து மருத்துவர், செவிலியர் என இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments