ஒரே நேரத்தில் ஐ.பி.எல். லீக் சுற்றின் கடைசி இரண்டு ஆட்டங்கள்... அதிரடி அறிவிப்பு

0 6478

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில், லீக் சுற்றின் கடைசி இரண்டு ஆட்டங்கள் ஒரே நேரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 8-ம் தேதி நடைபெறும் ஐதராபாத்- மும்பை இடையிலான போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கும், பெங்களூர்- டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி இரவு 7.30 மணிக்கும் நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய சூழலில் எந்தெந்த அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லும் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

இதனால் முந்தைய போட்டியின் முடிவை தெரிந்து கொண்டு கடைசி போட்டியை ரன்ரேட் அடிப்படையில் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அணிகள் முயற்சிக்கும் என்பதால் கடைசி இரண்டு போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments