ஓடும் பைக் மீது நின்றபடி சாகசம்... பொம்மை துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு அட்டகாசம் செய்த இளைஞர்கள்

0 3233

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஓடும் பைக் மீது நின்றபடி, பொம்மை துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட இரண்டு இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

துர்க்கையம்மன் கோயில் எதிரே உள்ள மேம்பாலத்தில் கேடிஎம் ,பல்சர் 220 பைக்குகளில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் இரண்டு பேர் திடீரென பைக்கில் இருந்து எழுந்து சீட் மீது நின்றபடி தங்களது ஃபேண்ட் பாக்கெட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுடுவது போன்று வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

வாகன பதிவு எண்களை அகற்றிவிட்டு சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments