ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 6சவரன் தங்கச்சங்கிலி பறிப்பு, 2பெண்கள் கைது

0 2820

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஓடும் பேருந்தில் சக பயணியிடம் 6 சவரன் தங்கச் சங்கிலியைத் திருடிய 2  பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

நகரம் கிராமத்தைச் சேர்ந்த சரோஜா என்பவர் பேருந்தில் சென்ற போது தூத்துக்குடியைச் சேர்ந்த  ரஞ்சிதா மற்றும் மாரி என்ற 2 பெண்களும் உடன் பயணம் செய்துள்ளனர்.

பின்னர் மூவரும் நயினார்கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சென்ற போது சரோஜாவின் கழுத்தில் இருந்த 6 சவரன் தங்க சங்கிலி மாயமாகி இருந்தது.

இதனை அடுத்து பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த மாரி, ரஞ்சிதாவின் கைப்பையை பொதுமக்கள் உதவியுடன் சரோஜா சோதனை செய்ததில் 6சவரன் தங்க சங்கிலி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments