டெல்லி சென்றுள்ள பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர்...பாஜகவில் சேரும் திட்டமில்லை - அம்ரீந்தர்சிங்

0 1401

டெல்லி வந்துள்ள பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங், தாம் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பாஜகவில் இணைய உள்ளதாக வந்த தகவல்களை மறுத்துள்ளார்.

சித்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருப்பது ஒரு நாடகம் தான் என்றும் வேறொரு அரசியல் கட்சியில் சேருவதுதான் அவரது நோக்கம் என்றும் அம்ரீந்தர் சிங் தெரிவித்தார்.

டெல்லிக்கு அமரீந்தர் சிங் வந்திருப்பது காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவா பாஜக தலைவர்களை சந்திக்கவா என்று மர்மம் நீடிக்கிறது. இதனிடையே சித்துவின் ராஜினாமாவைத் தொடர்ந்து பஞ்சாப் அமைச்சர் ராசியா சுல்தான் உள்பட நான்கு காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கட்சிப் பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments