முதியவரிடம் செல்போன் பறிப்பு... கொள்ளையர்களை துரத்தி சென்று பிடித்த மாற்றுத் திறனாளி ஆட்டோ ஓட்டுனர்..!

0 1617

சேலம் அம்மாப்பேட்டை அருகே முதியவரிடம் செல்போன் பறித்து தப்பியோடிய இருவரை பிடித்து போலீசில் ஒப்படைத்த மாற்றுத் திறனாளி ஆட்டோ ஓட்டுனரை மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா பாராட்டினார்.

சேலம் அம்மாபேட்டை நாமமலையைச் சேர்ந்த தங்கமணி என்பவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். நேற்று பகலில் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது வழியில் முதியவர் ஒருவரிடம் செல்போனை பறித்து கொண்டு இரு இளைஞர்கள் தப்பிச் செல்வதைக் கண்டார்.

இதனை அடுத்து அவர்களை துரத்தி சென்று பிடித்த தங்கமணி பொதுமக்கள் உதவியுடன் போலீசில் ஒப்படைத்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments