டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட், 10 ஆயிரம் ரன் கடந்த முதல் வீரர்... வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொல்லார்ட் புது மைல்கல்

0 1901

ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளும், 10 ஆயிரத்திற்கு அதிகமான ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற புது மைல்கல்லை வெஸ்ட் இண்டிஸ் வீரர் பொல்லார்ட் எட்டியுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய லீக் ஆட்டத்தின், 7-வது ஓவரில் கே.எல்.ராகுலின் விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் போட்டியில் பொல்லார்டின் விக்கெட் எண்ணிக்கை 300-ஐ கடந்தது.

இதன் மூலம் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட், 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சிறப்பை பொல்லார்ட் பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments