வேலை கிடைக்காத விரக்தியில் ரயில் முன் பாய்ந்து, தற்கொலைக்கு முயன்ற பெண் : ஓடி வந்து காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர் : இணையத்தில் பரவும் வைரல் வீடியோ

0 3930

த்திய பிரதேசத்தில் தண்டவாளத்தில் நின்றபடி தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. வேலை கிடைக்காத விரக்தி அடைந்த இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்தார்.

ரயில்வே கிராஸிங் வந்தடைந்த அப்பெண் ரயில் வருவது தெரிந்தத்தும் கேட்டை கடந்து சென்று தண்டவாளத்தின் குறுக்கே நின்றார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் மோசின் தன் உயிரை பொருட்படுத்தாமல் தண்டவாளத்தில் நின்ற பெண்ணைத் தர தரவென இழுத்து வந்தார்.

ரயில்வே கேட்டை பற்றியபடி கதறி அழுத பெண்ணிற்கு அங்கிருந்தவர்கள் ஆறுதல் கூறினர். அந்தப் பெண் மீண்டும் தற்கொலைக்கு முயற்சிக்காமல் இருக்க அவருக்கு Councilling வழங்கப்பட வேண்டும் என நெட்டிசன்கள் கமெண்ட்களில் பதிவிட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments