ஒரகடத்தில் ரூ.450 கோடி மதிப்பீட்டில் உருவாகும் மருத்துவ சாதனங்கள் பூங்காவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக, முதலமைச்சர் அறிக்கை

0 2589

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகும் மருத்துவ சாதனங்கள் பூங்காவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பூங்காவிற்கான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த அதிகபட்சமாக 100 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

வெண்டிலேட்டர்கள், பிபி திரைகள், பேஸ்மேக்கர்கள் தயாரிக்கும் தொழில்களை ஊக்குவிக்கும் விதமாக இம்மருத்துவ சாதனங்கள் பூங்கா அமையும் என்று கூறியுள்ள முதலமைச்சர், 3500 கோடி ரூபாய் முதலீட்டினை ஈர்ப்பதுடன் 10 ஆயிரம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பையும் அளிக்கும் என தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments