பண்டிகை காலத்தில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்

0 2118

நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள போதிலும், பண்டிகை காலத்தில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா எழுதிய கடிதத்தில், பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க அறிவுறுத்தியுள்ளார்.

பண்டிகைகள், திருவிழாக்கள், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் அதிக மக்கள் கூடுவது கொரோனா பரவலுக்கு வித்திடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தவும், 2ஆவது டோஸ் செலுத்த முன்னுரிமை தர வேண்டும் என்றும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments