சென்னையில், வட்டிக்கு பணம் கொடுத்து நிலத்தை அபகரித்த வழக்கில் தொழிலதிபர் தன்ராஜ் கோச்சார் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை

0 3073

சென்னையில், வட்டிக்கு பணம் கொடுத்து நிலத்தை அபகரித்த வழக்கில் தொழிலதிபர் தன்ராஜ் கோச்சார் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் டி.ஆர்.பவுண்டேஷன் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தியவர் தன்ராஜ் கோச்சார். சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தன்ராஜ் கோச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் வேப்பேரி, கீழ்பாக்கம், எழும்பூர் என தன்ராஜ் கோச்சார் தொடர்புடைய 10 இடங்களில் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

காலை 5 மணியிலிருந்து நடைபெறும் சோதனையில், சட்டவிரோத பணபரிமாற்றம் குறித்து முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments