குடிநீர் குழாய் உடைப்பால் நாவல் மரத்திலிருந்து திடீரென வெளியேறிய தண்ணீர்.. சாமி அருள் என நினைத்து மரத்துக்கு மஞ்சள் துணி கட்டி வழிபாடு..

0 2576

தென்காசி அருகே நாவல் மரத்தின் தண்டுப் பகுதியில் இருந்து திடீரென தண்ணீர் வந்ததால், சாமி அருள் என நினைத்து சிலர் மரத்துக்கு மஞ்சள் துணி கட்டி வழிபட்ட நிலையில், அது குடிநீர் குழாய் உடைப்பால் வந்த தண்ணீர் என்பது பிறகு தெரியவந்தது.

அம்பை சாலை குற்றாலம் விலக்கு அருகே முப்பிலி மாடசாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு எதிரே சாலையோரம் இருந்த நாவல் மரம் ஒன்றின் தண்டுப் பகுதியில் இருந்து திடீரென தண்ணீர் வெளியேறி இருக்கிறது.

சாலையில் சென்ற சிலர் அதனைப் பார்த்து, சாமி அருள் எனக் கூறி, மரத்துக்கு மஞ்சள் துணிகட்டி, அந்தத் தண்ணீரை தீர்த்தம் போல பாட்டில்களில் பிடித்துச் செல்லத் தொடங்கினர்.

தகவலறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், மரத்துக்குக் கீழே செல்லும் கூட்டுக்குடிநீர் திட்டக் குழாய் உடைந்து வேர் இடைவெளியின் வழியாக தண்ணீர் வெளியேறுவது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments