தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு பறிமுதலான 400 வாகனங்கள் ஏலம்

0 5863

மிழ்நாட்டில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு பறிமுதலான சுமார் 400 வாகனங்கள் வரும் வாரங்களில் ஏலத்தில் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை யாரும் உரிமைகோராத நிலையில், அவை ஏலம் விடப்பட உள்ளது. கைவிடப்பட்ட நிலையில் உள்ள பைக்குகள், ஆட்டோக்கள், கார்கள் உள்ளிட்டவை அரசு கிடங்குகளிலேயே குவிந்து கிடப்பதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வாகன உரிமையாளர்களுக்கு 3 முறை நோட்டீஸ் அனுப்பியும், அவர்கள் வாகனத்தை  திரும்பபெறாததால் ஏலம் விடுவதை தவிர வேறு வழியில்லை என வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். ஏலம் விடப்படும் இடம், நேரம் ஆகிய விவரங்கள் குறித்து https://tnsta.gov.in/homepage என்ற போக்குவரத்துத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments