’நண்பேன்டா’ ஆட்டுக்குட்டி மீது அமர்ந்து கொண்டு பெர்ரி பழங்களை சுவைக்கும் குரங்கின் வைரல் வீடியோ

0 1870

ஆட்டுக்குட்டி மீது அமர்ந்து கொண்டு குட்டி குரங்கு ஒன்று பெர்ரி பழங்களை சுவைக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அடந்த வனப்பகுதியில் நபர் ஒருவர் அழைக்கவே, காட்டுக்குள் இருந்து வந்த ஆட்டுக்குட்டியின் கழுத்தில் குரங்கு குட்டி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.

அந்த நபரின் கை நிறைய பெர்ரி பழங்களை பார்த்ததும் ஆட்டுக்குட்டி ரசித்து ஒவ்வொன்றாக சாப்பிட்டுக் கொண்டிருக்க, சிறிதுநேரம் முழித்த அந்த குரங்கு, பின்னர் பெர்ரி பழத்தை கையில் எடுத்தது. பின்னர், தொங்கிக் கொண்டே பழங்களை திருப்தியாக சாப்பிட முடியாது என நினைத்து ஆட்டுக்குட்டியின் மீது ஒய்யாரமாக ஏறி அமர்ந்து கொண்டது.

இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என தெரியாத நிலையில், 12 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments