பாஜகவில் இணைகிறாரா பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்?

0 3333

பஞ்சாப் முதலமைச்சராக இருந்த அமரீந்தர் சிங் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் அவர் பாஜகவில் சேர்ந்து மத்திய வேளாண் அமைச்சராக நியமிக்கப்படுவார் என தகவல்கள் கூறுகின்றன.

மாலை டெல்லி வரும் அவர், பாஜக தேசிய தலைவர் நட்டாவையும் சந்திப்பார் என கூறப்படுகிறது. அதே நேரம் அமரீந்தர் சிங் பாஜகவில் சேர ஆர்வம் காட்டவில்லை என்றால், அவர் தனிக்கட்சி துவங்குவதற்கான உதவிகளை பாஜக செய்யும் எனவும் கூறப்படுகிறது.அதன் பின்னர் பாஜக கூட்டணி அரசில் அவர் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments