பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சித்து திடீர் ராஜினாமா

0 2723

ஞ்சாப் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து திடீரென விலகியுள்ளார்.

அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக சித்து அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில், அவர் ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் சித்துவின் ஆதரவாளராக கருதப்படும் ரசியா சுல்தானா, அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இதனிடையே டெல்லி சென்ற முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகவும், அவர் பாஜகவில் இணைவார் என்றும் தகவல் வெளியானது.

இதனை மறுத்த அவர், பஞ்சாப் முதல்வர் இல்லமான கபூர்தலா வீட்டை காலி செய்யவே டெல்லி வந்ததாகவும், அரசியல்வாதிகள் யாரையும் சந்திக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார். சித்து நிலையற்றவர் என்றும் எல்லை மாநிலமான பஞ்சாப்பிற்கு அவர் பொருத்தமற்றவர் என்றும் அமரீந்தர் சிங் விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments