முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகனை கொல்ல முயன்றவர் அடுத்த ஆண்டு விடுவிப்பு

0 1545
முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகனை கொல்ல முயன்றவர் அடுத்த ஆண்டு விடுவிப்பு

முன்னாள் அமெரிக்க அதிபர் Ronald Reagan-ஐ சுட்டுக்கொல்ல முயன்றவர் அடுத்தாண்டு ஜூன் மாதம் வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

40 ஆண்டுகளுக்கு முன், 1981 மார்ச் 30 அன்று, வாஷிங்டனில் உள்ள ஒரு ஹோட்டல் முன் Ronald Reagan-ஐ John Hinckley சுட்டுக் கொல்ல முயன்றார். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற அடிப்படையில், குற்றமற்றவர் என்று அறிவிக்கப்பட்டு மனநல மருத்துவமனையில் 2016 வரை வைக்கப்பட்டிருந்தார்.

அதன் பிறகு நீதிமன்றத்தின் கடுமையான நிபந்தனைகளுடன் அவரது வீட்டுக் காவலில் இருந்து வருகிறார். இந்நிலையில், அடுத்தாண்டு ஜூன் மாதத்தில் இருந்து அவர் மீதான அனைத்து கட்டுப்பாடுகளும் ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments