ஐதராபாத்தில் விபரீதம் ; இரவு நேர மழையில் சாக்கடையில் தவறி விழுந்த ஐ.டி பணியாளரின் உடல் மீட்பு

0 2672
ஐதராபாத்தில் விபரீதம் ; இரவு நேர மழையில் சாக்கடையில் தவறி விழுந்த ஐ.டி பணியாளரின் உடல் மீட்பு

ஐதராபாத்தில் நிறைந்து வழிந்த சாக்கடை கால்வாயில் தெரியாமல் விழுந்து இறந்த ஐ.டி பணியாளரின் உடலை பேரிடர் மீட்பு குழுவினர் இன்று மீட்டனர். சைபராபாத்தின் மணிகொண்டா பகுதியில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் முழங்கால் அளவு ஓடியது. அதில் நடந்து வந்த ரஜினிகாந்த் என்ற நபர் சாக்கடை கால்வாய் என தெரியாமல் அதில் தவறி விழுந்தார்.

இந்த வீடியோ வெளியானதும் அவரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படை, போலீஸ் மற்றும் ஐதரபாத் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். பாதாள சாக்கடையின் உள்ளே விழுந்த அவரது உடல் இன்று மீட்கப்பட்டது.

குலாப் புயல் காரணமாக ஐதராபாத்தில் சனிக்கிழமை இரவு கனமழை பெய்தது. அதனால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments